பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையொடு முடிவடைய உள்ள நிலையில் கமல் தற்போது, இறுதி சுற்றில் உள்ள நான்கு போட்டியாளர்களிடம் பேசும் காட்சி புரோமோவில் வெளியாகியுள்ளது.

இதில், சாண்டி மற்ற நான்கு பேர் பைனலுக்குள் வந்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என நடித்து காட்டுகிறார். 

முதலில் வனிதா, பெயரை முகேன் சொல்ல... சாண்டி கொஞ்சம் தூரத்தில் இருந்து நடந்து வந்து, முகேன் சட்டையில் இருந்து சப்பாத்தி போடும் கட்டையை கையில் எடுத்து கொண்டு, ஷெரின் ஏதோ சொல்ல ஷெட் அப் என சொல்லி விட்டு, சார் எனக்கு கத்தி பேசுறது பிடிக்காது.

சண்டை நான் போட்டதே இல்லை யார் கிட்டையுமே. நான் இந்த வீட்டில் சமாதான புறா. சமாதான புறாவோடை இன்னொரு பேரு வனிதா என சொல்லுவாங்க என சாண்டி கூற, அரங்கமே கை தட்டி ஆரவாரம் செய்கிறது. கமலும், சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறார்.

அந்த அளவிற்கு சாண்டி பங்கமாக வனிதாவை கலாய்த்த புரோமோ இதோ..