ஹவுஸ்மேட்ஸிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ‘சாக்‌ஷி தான் என்னிடம் முதலில் ப்ரபோஸ் செய்தார்’ என்று கவின் சொன்னதைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத சாக்‌ஷி, வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் மூன்று கேள்விகளை கேட்ட நிலையில் கவின் சாக்ஷி விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து சாக்ஷியின் முகத்திரையை கிழித்து வெளியிட்டிருக்கிறார் நடிகை காஜல். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் சாக்ஷி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் ஒளிபரப்பான எபிசோடில் கவின், சாக்ஷி தனது விளையாட்டை சீரியஸாக எடுத்துக்கொண்டார் என கூறினார். தான் உண்மையிலேயே சீரியஸாக லாஸ்லியாவை காதலிப்பதாக மறைமுகமாக கூறினார். இதைத்தொடர்ந்து  ஹவுஸ்மேட்ஸிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ‘சாக்‌ஷி தான் என்னிடம் முதலில் ப்ரபோஸ் செய்தார்’ என்று கவின் சொன்னதைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத சாக்‌ஷி, வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் மூன்று கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.

யார் யாருக்கு பிரபோஸ் பண்ணாங்க? பாத்ரூமில் என்னிடம் கத்தினார் கவின். இந்த உரிமை மற்றவர்களிடம் இருக்குமா? அதன்பிறகும் மன்னித்து அவருடன் நான் பேசினேன். இதற்கு அர்த்தம் என்ன? கல்யாணம் செய்துகொள்ள நான்கு பாய்ண்ட் வந்துவிட்டதாக என்னிடம் சொன்னார். ஷெரின் என்னைப் பார்க்க விருப்பப்பட்டால், கவின் வீட்டுக்குத்தான் வரவேண்டும் என்று சொன்னார். இப்படியெல்லாம் கவின் பேசக் காரணம் என்ன?

கடைசியாக “நினைத்த நேரத்தில் மாற்றிக்கொள்ளும் உடையைப் போல பெண்களை நினைக்காதீர்கள். உங்களுக்கு வேண்டுமென்றால் நாங்கள் அப்படித் தோன்றலாம். ஆனால், நாங்கள் அப்படியல்ல” என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சாக்‌ஷி.

மேலும் லாஸ்லியாவுக்கு தனக்கும் கவினுக்கும் இடையே இருந்த காதல் தெரியும், லாஸ்லியா தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியது பொய், தான் ஜெயிலில் இருக்கும்போதே எல்லாவற்றையும் அவரிடம் கூறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அந்த வீடியோவில் சாக்ஷி கேட்ட கேள்விகளுக்கு நடந்த வீடியோ காட்சிகளை மிக்ஸ் செய்து கவின் ஆர்மியினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசும்போது சாக்ஷி முகெனிடம், கவின் தன்னை காதலிப்பதாக சொல்லவில்லை என கூறுகிறார். அடுத்ததாக தன்னிடம் கவின் எந்த உரிமையில் கத்தினார் என்ற கேள்விக்கும், கவின் பதிலளித்த காட்சியும் இடம்பெற்றுள்ளது. அதாவது, நீ என்னிடம் கத்தலாம் அதற்கான உரிமை உனக்கு உள்ளது என சாக்ஷி தன்னிடம் கூறியதாக அவருக்கு முன்பே கவின் கூறுவதாக உள்ளது. 

"

இதைத்தொடர்ந்து ஜெயிலில் இருக்கும் சாக்ஷி, தனக்கும் கவினுக்கும் இடையில் இருப்பது காதல் இல்லை என்று லாஸ்லியாவிடம் சொல்கிறார். மேலும் முதல் நாளில் இருந்தே கவினை தனக்கு பிடிக்கும் ஆனால் அது காதல் இல்லை என்றும் லாஸ்லியாவிடம் சொல்கிறார் சாக்ஷி. இந்த மிக்ஸ் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வா அவ்வா என கிண்டலடித்து ஷேர் செய்துள்ளார் சாண்டியின் முதல் மனைவியும், நடிகையுமான காஜல்.  கவின் சாண்டியின் நெருங்கிய நண்பர் என்பதால் அவருக்கும் பெரும் ஆதரவு அளித்து இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.