Asianet News TamilAsianet News Tamil

’பத்துப்பைசா கூட வாங்காமல் 14 படங்களில் நடித்தேன்’...இப்படியும் ஒரு ஏமாளி ஹீரோ...

தற்போதைய தயாரிப்பாளர்களிடம் நேர்மையை எதிர்பார்க்கமுடியவில்லை. இதுவரை எனக்கு 14 படங்களில் பத்துப்பைசா கூட சம்பளம் தராமல் தயாரிப்பாளர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள்’என்கிறார் தொடர்ந்து சுமாரான படங்களிலேயே நடித்துவரும் நாயகன் சந்தீப் கிஷன்.

sandeep kishan interview
Author
Chennai, First Published Jul 10, 2019, 11:46 AM IST

தற்போதைய தயாரிப்பாளர்களிடம் நேர்மையை எதிர்பார்க்கமுடியவில்லை. இதுவரை எனக்கு 14 படங்களில் பத்துப்பைசா கூட சம்பளம் தராமல் தயாரிப்பாளர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள்’என்கிறார் தொடர்ந்து சுமாரான படங்களிலேயே நடித்துவரும் நாயகன் சந்தீப் கிஷன்.sandeep kishan interview

தமிழில் ’யாருடா மகேஷ்?’, ’மாநகரம்’, ’மாயவன்’ ஆகிய படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன்.தற்போது நரகாசுரன், கண்ணாடி, கசடதபற ஆகிய படங்களில் நடிக்கிறார். சில தெலுங்கு படங்களிலுமாக சேர்த்து அவர் இதுவரை சுமார் 25 படங்களில்  நடித்துள்ளார். 

இந்நிலையில் அடுத்து வெளியாக இருக்கும் தனது ‘கண்ணாடி’படத்தை பெரிதும் எதிர்பார்ப்பதாக கூறும் சந்தீப்,“சினிமாதான் எனக்கு மூச்சு. தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக ஆசைப்பட்டேன். தெலுங்கில் ரகுல்பிரீத் சிங்குடன் நடித்த ’வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்துக்குப்பின் பெரிய நடிகர்கள் பட்டியலில் இடம்பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நடக்கவில்லை. அடுத்த படம் வராமல் இரண்டு வருடங்கள் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தேன்.படங்கள் தோல்வியால்தான் வாய்ப்பு வராது .ஆனால் எனக்கு ஒரு வெற்ற்ப்ப்படத்துக்குப் பிறகும்  வாய்ப்புகள் வரவில்லை. எனது சில தோல்விக்கு நான்தான் காரணம் என்று பழிசுமத்தினர். மனதில் எவ்வளவோ வலிகள் ஏற்பட்டன. ஆனாலும் அவற்றை கடந்து சென்றேன். இதுவரை 14 படங்களுக்கு சம்பளமே வாங்காமல் இலவசமாக நடித்து இருக்கிறேன். அந்த படங்களின் கதைகள் பிடித்ததால் பணம் வாங்காமல் நடித்தேன்.sandeep kishan interview

படம் வெற்றி பெற்றதும் சம்பளம் தருவதாக தயாரிப்பாளர்கள் வாக்குறுதி அளித்தனர். அவற்றில் பாதிக்கு மேல் படங்கள் தோல்வி அடைந்தன. அதனால் அவர்கள் பணம் தரவில்லை. வெற்றி பெற்ற படங்களுக்கும் சம்பளம் தராமல் ஏமாற்றிவிட்டனர். படங்கள் தோல்வி அடைந்ததும் பயந்து வெளிநாட்டுக்கு ஓடிப்போய் விட்டேன். திரும்பி வந்ததும் மீண்டும் பட வாய்ப்புகள் வந்ததால் நடிக்க ஆரம்பித்து உள்ளேன்.”என்று ஒப்பாரி வைக்கிறார் சந்தீப் கிஷன்.

Follow Us:
Download App:
  • android
  • ios