நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என எப்போதும் விஷால் பிஸியாக இருந்தாலும், படங்களிலும் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். தற்போது 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா', மற்றும் 'சண்டை கோழி 2 ' ஆகிய படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள விஷால் அடுத்ததாக 'சண்டை கோழி 2 ' படத்தில் நடிக்க தயாராகி இருக்கிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். மேலும் விஷாலின் காதலி என்று கிசுகிசுக்கப்படும் வரலட்சுமி சரத்குமாரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இந்த படத்தில் வரலட்சுமி என்ன கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது, விஷாலின் அத்தை மகள் கதாபாத்திரத்தில் வரலட்சுமி  நடிப்பதாகவும். கீர்த்தி சுரேஷ் மற்றும் விஷாலின் காதலுக்கு வில்லியாக வருவது போன்று நடிக்க உள்ளாராம். 

இப்படத்திற்காக மதுரையை  போலவே சென்னையில் செட் அமைத்து படத்தை இயக்க முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். இன்னும் சில நாட்களில் பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.