தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாகிறது சண்டக்கோழி 2 திரைப்படம். இதனால் தற்போது இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

விஷால் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் சிங்கிள் பாடல் சில நாட்களுக்கு முன் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில். நடிகை கீர்த்தி சுரேஷ், திடீர் என இந்த படத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவருக்கும் தங்க காசுகளை பரிசாக வழங்கினார். ஏற்கனவே 'நடிகையர் திலகம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இதோ போன்ற செயலை கீர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷை காப்பி அடிப்பது போல், விஷால் படக்குழுவினர் அனைவருக்கும் தங்க காசுகள் கொடுத்துள்ளார். இவரை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமியும் படக்குழுவை சேர்ந்த 150 பேருக்கு தங்க காசுகளை பரிசாக வழங்கியுள்ளார். 

ஒரே படத்தில் நடித்த, நடிகை, நடிகர், மற்றும் இயக்குனர் ஆகியோர் தனிதனியே படகுழுவினர்களுக்கு தங்க காசுகள் கொடுத்துள்ளதால். சண்டகோழி 2 படக்குழுவினர் சந்தோசம் அடைந்துள்ளனர்.