கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக ஒரு கலக்கு கலக்கியவர் நடிகர் சந்தானம், தற்போது ஹீரோவாக மாறி, தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் தான் நடிப்பேன் என அடம் பிடித்து கொண்டிருக்கிறார். காமெடி சப்ஜெக்ட் கதைகள் சொன்னாலும் ஆக்ஷன் கதை கேட்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறாராம்.

இவர் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வெளியான சில படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் ஒரே நேரத்தில் பல படங்களில் ஹீரோவாக நடிப்பதில் பிஸி ஆனார்.ஆனால் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகவில்லை. இதனால் இந்த வருடம் தன்னுடைய ரிலீஸ் எண்ணிக்கையை முதல் மாதத்திலிருந்தே சந்தானம் துவங்க உள்ளதாக தெரிகிறது. 

இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன தில்லுக்கு துட்டு படத்தின், இரண்டாம் பாகம் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து தற்போது  ரிலீசுக்கு தயாராக உள்ளது. 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் ஜனவரியில் வெளியாகவுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் பாகம் போலவே இந்த படமும் பேய்க்கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானம், ஷிரிதா ஷிவதாஸ், மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ளனர். பேட்ட, விஸ்வாசத்தை, தொடர்ந்து சந்தானம் அதிரடியாக களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.