பிரபல மாடலும், நடிகையுமான சனம் ஷெட்டி பட வாய்ப்புகள் வசப்பட வேண்டும் என பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடினார். ஆரபத்தில் இவர் ஓவராக பேசுவதாலும், வான்டடாக பல வம்புகளை இழுத்ததாலும், மக்களின் பார்வையை பெறவும், கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி சனம் ஷெட்டி நடந்து கொள்வதாக இவர் மீது நெகடிவ் தோற்றம் ஏற்பட்டது.

ஆனால், 60 நாட்களை பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த பின்னரும் சனம் ஷெட்டி முதல் நாளில் எப்படி இருந்தாரோ அதே போல் தான் இருந்தார். ஆனால் ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளை எழுப்பிய ரியோ, அனிதா, ஆகியோர் அடங்கி போனதையும் பார்க்க முடிந்தது.

சனத்தின் உண்மையான குணம் இதுதான் என தெரியவந்த பின், போட்டியாளர்கள் மத்தியில் மட்டும் அல்ல மக்கள் மத்தியிலும் சனத்திற்கு ஆதரவு கூடியது. எனவே சனம் இந்த வாரம் வெளியேற உள்ளார் என்கிற தகவல் வெளியானதில் இருந்தே அவரை வெளியேற்ற கூடாது என பிக்பாஸ் ரசிகர்கள் குரல் கொடுத்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சனம் ஷெட்டி நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது தற்போது வரை பல ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. வெளியே சென்ற பின் சனம் ஷெட்டி தனக்கு மக்களிடம் உள்ள ஆதரவை கண்டு மனமகிழ்ச்சியுடன் அதுவும் தமிழில் நச் என ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில் 'தமிழ் மக்களுக்கு நன்றி' என கூறியுள்ளார்.