தமிழ் ரசிகர்களுக்கு, யார் என்றே தெரியாமல், மாடலிங் துறையை சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் பார்ப்பதற்கு அசப்பில் பிரபல நடிகர் முரளியின் மகனும், நடிகருமான அதர்வா போலவே இருப்பதால் இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உருவாகினர்.

மேலும், இவர் மிகவும் சைலண்டாக இருந்து தன்னுடைய விளையாட்டை விளையாடியது, இவரின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவது போல் இருந்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு முதலில் வெளியேறிய பாத்திமா பாபு கூட தர்ஷனை தன்னுடைய சொந்த மகனாகவே பார்பதாகவும். அவருக்கு இந்த போட்டி இருத்தி வரை வர தகுதி உள்ளது என கூறி சென்றார்.

அதே போல் மக்களும் இவருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்தனர். ஹவுஸ் மேட்சும் இவரை திறம்பட விளையாடும் எதிர் போட்டியாளராகவே பார்த்த நிலையில், கடந்த வாரம் யாரும் எதிர்பாராத வண்ணம் இவர், மக்களிடம் குறைந்த வாக்குகளை பெற்றதால் வெளியேறுவதாக அறிவித்தார் நடிகர் கமலஹாசன். 

தர்ஷன் வெளியேற்ற பட்டது அனைவருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் கலந்து கொள்ள முக்கிய காரணம் சனம் ஷெட்டி தான். தர்ஷன் உள்ளே இருந்த போது அவரை காதலிப்பது போல் அவருடன் எடுத்து கொண்ட பல புகைப்படங்களை பகிர்ந்தார். தர்ஷனும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சனம் ஷெட்டியை சென்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தர்ஷனுக்கு நெருக்கமான ஒருவர், தர்ஷன் தற்போது வரை சிங்கிள் தான் என்றும், அவர் யாரையும் காதலிக்க வில்லை என பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார். இதனால் சனம் ஷெட்டி கூறியது பொய்யா? என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த கேள்விக்கு சனம் செட்டியோ... அல்லது தர்ஷனோ தான் பதில் சொல்ல வேண்டும்.