பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியின் மூலம், மிகவும் பிரபலமான தர்ஷன், கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் பெற்ற பிரபல மாடலும், நடிகையுமான சனம் ஷெட்டியை காதலித்து வந்தார் என்பதை, சனம் ஷெட்டி பல்வேறு, பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்தார்.

ஆனால் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது, காதல் பற்றி பெரிதாக எதுவும் பேசாத தர்ஷன், வெளியே வரும் சமயத்தில் தான் தனக்கு ஒரு காதலி இருப்பதை வெளிப்படுத்தினார்.

மேலும் தர்ஷன் பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்வதற்கு முன், சனம் ஷெட்டிக்கும், தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது. இது குறித்த சில புகைப்படங்களை காட்டி, தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கூறி போலீசில் புகார் செய்தார் சனம்.

இதற்கு விளக்கம் கொடுத்த தர்ஷன், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான் ஆனால் இது தன்னுடைய அம்மாவிற்கு தெரியாது என்றும், சனம் ஷெட்டி அவருடைய முன்னாள் காதலரோடு நைட் பார்ட்டியில் ஒன்றாக இருந்தததே இருவரும் பிரிய காரணம் என கூறினார்.

இந்த விஷயம் குறித்து ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் கூறி வரும் நிலையில், தற்போது திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை அடுத்து, சனம் ஷெட்டி மற்றும் தர்ஷன் படுக்கை அறையில் மிகவும் நெருக்கமாக படுத்து கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிச்சியடைய செய்துள்ளது. 

அந்த புகைப்படம் இதோ...