2020ம் ஆண்டின் தொடக்கத்தையே கலகலக்க வைத்தார் சனம் ஷெட்டி. பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் திருமணம் கூட நிச்சயிக்கப்பட்டிருந்தது. சனம் ஷெட்யின் மூலமாக தான் தர்ஷனுக்கு பிக்பாஸ் 3-ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அவருக்காக 15 லட்சம் ரூபாய் வரை பணத்தை செலவு செய்த தன்னை மனம் மற்றும் உடல் ரீதியாக தர்ஷன் துன்புறுத்தியதாகவும் சனம் ஷெட்டி பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 

இதையும் படிங்க: அப்பாவுடன் விஜய் பேசாததற்கு காரணம் இதுதான்... உண்மையை ஓபனாக போட்டுடைத்த அம்மா ஷோபா...!.

இதற்காக காரணத்தை வெளிப்படுத்திய தர்ஷன், தான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த சமயத்தில் சனம் தனது முன்னாள் காதலருடன் பார்ட்டி கொண்டாடியதாக குற்றச்சாட்டினார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக தர்ஷன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சனம் ஷெட்டி. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். 

இதையும் படிங்க: காதல் கணவருடன் ஹனிமூன் புறப்பட்ட காஜல் அகர்வால்... வைரல் போட்டோ...!

இதையடுத்து தர்ஷன் மீது, அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் 294(பி)- ஆபாசமாக பேசுதல், 506-மிரட்டல், 420- மோசடி, 354- பெண்ணை மானபங்கப்படுத்துதல் என நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த மனு மீதான் விசாரணை நேற்று நடைபெற்றது. அதில் மூன்று வாரத்திற்குள் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அடையார் மகளிர் காவல் நிலையத்தில் தர்ஷன் மீது பதியப்பட்ட வழக்குகளின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.