விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஹரி, சிங்கம் மூன்றாம் பாகத்தை முடித்தவுடன் விக்ரம் நடிப்பில் 'சாமி 2' திரைப்படம் விரைவில் இயக்க உள்ளதாக கூறினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் 'சாமி 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் லோகாவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தை 'இருமுகன்' படத்தை தயாரித்த சிபுதமீன் தயாரிக்கின்றார். இந்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குனர் ஹரி. மேலும் கவுதம் மேனனின் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் விக்ரம் 'சாமி 2' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்க படுகிறது.

அதே போல் இரண்டாம் பாகத்தில் நாயகியாக த்ரிஷா மற்றும் மேலும் ஒரு முன்னணி நாயகி நடிக்கவுள்ளதாகவும், மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது படக்குழு.