samuthrakani twit for mersal support

நடிகர் சமுத்திரக்கனி, எப்போதுமே அவர் இயக்கி நடிக்கும் படங்களை சமூகக் கண்ணோட்டதோடு எடுத்து, அதன் மூலம் ஏதாவது ஒரு கருத்தை வலியுறுத்துவார்.

அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளிவந்த ஈசன், அப்பா, தொண்டன், போராளி ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவைதான். 

இந்நிலையில் இவர் மெர்சலுக்கு பாஜக., மற்றும் மருத்துவர்கள் சங்கத்தால் வரும் பிரச்னையை எதிர்ப்பது போல் ஒரு கருத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில் "மெர்சல் மிரட்டுதா...? மிரளும் தேசம்... மீட்போம் உரிமையை...!!! காப்போம் தமிழனை... அடங்க மறு" என கூறி மெர்சலாக ஒரு ட்விட் செய்துள்ளார் .

Scroll to load tweet…