samuthirakani movie got 2 awards

தமிழ் சினிமாவில் மட்டும் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 15 திரைப்படங்களாவது வெளியாகிறது. இவற்றில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்களின் ஆதரவை பெற்று வெற்றி இலக்கை தொடுகிறது.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்தின் மூலமும் ஏதாவது ஒரு கருத்தை மக்கள் மனதில் பதிக்கிறார். அதே போல் இவர் நடித்த படங்களும் அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களும் கூட ஏதாவது ஒரு கருத்தை தெரிவிக்கும் விதத்தில் தான் உள்ளது.

தற்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கடந்த வருடம் வெளியான படங்களில் 8 படங்களை விருதுக்காக தேர்வு செய்துள்ளனர். இதில் சமுத்திரகனியின் அப்பா படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை படமும் விருதை பெற்றுள்ளது. இதிலும் சமுத்திரகனி நடித்துள்ளார். அதே போல அரசியலுக்கு சவுக்கடி கொடுத்த ஜோக்கர், நண்பர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட உறியடி படமும் தேர்வாகியுள்ளது. இந்த விருது கொடுக்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது இதில் சமுத்திரக்கனி நடித்த படம் மற்றும் அவர் இயக்கிய படமும் தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.