Samuthirakani is going to make film with sasikumar

சசிகுமாரை வைத்து தமிழில் ஒரு படத்தை உருவாக்க இருக்கிறார் சமுத்திரக்கனி. இவர்களின் கூட்டணி ஏற்கன்வே வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

முத்தையா இயக்கத்தில் உருவாகும் ‘கொடி வீரன்’ படத்தில் நாயகனாக நடித்து தயாரித்து வருகிறார் சசிகுமார்.

இந்த நிலையில் தமிழில் சசிகுமாரும், தெலுங்கில் நானியை வைத்தும் ஒரே கதையை இயக்க முடிவு செய்திருக்கிறார் சமுத்திரக்கனி. இதுகுறித்து சசிகுமாரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

எப்போதுமே ஒரு படத்தை முடித்துவிட்டு, தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுபவர் சசிகுமார்.

அதேபோன்று ‘கொடி வீரன்’ படத்தை முடித்துவிட்டு, சமுத்திரக்கனி படம் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘நாடோடிகள்’ மற்றும் ‘போராளி’ ஆகிய படங்களில் இணைந்து வெற்றியைக் கொடுத்த சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் இணைந்தால் அந்தப் படம் வெற்றிப் பெரும் என்பதும் மக்கள் எதிர்ப்பார்ப்பும் கூடும் என்பதும் அனைவரும் அறிந்ததே.