நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாரும் எதிர்பாராத உதவியை செய்து பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறார் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி.

ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது சிறந்த நடிகராக அனைவராலும் அறியப்பட்டவர் சமுத்திரக்கனி. இவர் தேர்வு செய்து நடிக்கும் கதைகள் எதார்த்தமான உண்மைகளை பிரதி பலிப்பதால், இவருக்காக தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக தமிழகத்தை உலுக்கிய கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

குறிப்பாக கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. அவர்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

பல்வேறு இடங்களில் புயல் காற்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளியூரில் உள்ள உறவினர்கள் அங்கு இருப்பவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

மேலும் பல மின் ஊழியர்கள் சாப்பிட கூட ஓய்வு இன்றி மின்கம்பிகளை சரிசெய்யும் பணியில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். 

பலர் உடை, உணவு, போன்ற பல உதவிகள் செய்தாலும் மின்சார தேவை குறித்து யோசிக்க கூட இல்லை. ஆனால் இந்த மின் உபயோகத்தில் அவசியத்தை அறிந்த சமுத்திரக்கனி, முதல் வேலையாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஜெனரேட்டர் வாங்கி அதனை பாதிக்க பட்ட மாவட்ட மக்களுக்கு அனுப்பியுள்ளார். 

மின்சாரம் இல்லாமல் செல்போனுக்கு சார்ஜ் போட முடியாமல், தங்களுடைய நிலை குறித்து வெளியூரில் உள்ள உறவினர்களுக்கு சொல்ல முடியாமல் தவித்து வந்தார்கள். இதனை சரி செய்யும் போட்டு யாரும் எதிர்பார்க்காத உதவியை சமுத்திர கனி செய்துள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.