Sami Vikram to be hands-free 14 years later
கடந்த 2003--ஆம் ஆண்டு அரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்ற படம் சாமி.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து தற்போது உருவாக உள்ளது.
இந்தப் படத்த்தில் ஹேண்ட்ஸம் போலீசாக விக்ரமும், அவருக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கின்றார்.
விக்ரம், கீர்த்தி சுரேஷ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.
இப்படத்தின் தலைப்பை சாமி 2 என்பதற்குப் பதிலாக சாமி ஸ்கொயர் என்று மாற்ற படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.
இதுப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாலில் வெளியாகும். மேலும், விக்ரம், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் அரி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் சேர்ந்து எடுத்துக் கொண்ட குரூப்பியும் அதகளமாக பரவி வருகிறது.
