பிரபா நடிகை சமீரா ரெட்டியின் குழந்தை நைரா, கண்ணாடி போடும் அழகை சூப்பர் ஸ்டார் ஸ்டைலுடன் ஒப்பிட்டு இவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. பின் அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை , உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். மேலும் இந்தி, தெலுங்கு, போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.

பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், சற்றும் தாமதிக்காமல் நடிகை சமீரா ரெட்டி, தொழிலதிபர் அக்ஷய் வார்த்தேவ் என்பவரை கடந்த 2014  ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் குழந்தைகளை கவனிப்பதில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.

தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் அதிக ஆர்வம் காட்டி வரும் சமீரா, அடிக்கடி தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்து கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 


அதிலும் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கில், தன்னுடைய மாமியாருடன் சேர்ந்து விதவிதமாக உணவுகளை சமைக்கும் வீடியோ வெளியிட்டு அசத்தி வருகிறார்.

அந்த வகையில், பிறந்து இன்னும் ஒரு வயது கூட நிரம்பாத தன்னுடைய மகள் நைரா கருப்பு நிற கண்ணாடி போடுவதை, சூப்பர் ஸ்டார் ஸ்டைலுடன் ஒப்பிட்டு ஒரு வீடியோ ஒன்றை போட்டுள்ளார். நைராவின் இந்த கியூட் வீடியோ... ரசிகர்களையும், நெட்டிசன்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.