தமிழில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்த, 'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவருக்கு தொடர்ந்து தமிழில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. 

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஷால், உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தார். மேலும் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

இவர், கடந்த 2015ஆம் ஆண்டு அக்சய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.  திருமணத்திற்கு பின், திரையுலகை விட்டு முழுமையாக விலகினார். இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தன்னுடைய, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.

இவர் நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையிலும் நீச்சலுடையில், கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதற்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.