கோலிவுட்டில், அறிமுகம் கொடுக்கும் அனைத்து நடிகைகளுக்கும் எப்படியும் 'விஜய்' மற்றும் 'அஜித்துடன்' இணைத்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது தான் கனவு.

ஒரு சில நாயகிகளுக்கு மட்டுமே அப்படி பட்ட வாய்ப்புகள் கிடைக்கிறது. அதிலும், அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது, அதே போல விஜயுடன் சேர்ந்து நடித்தால் அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது.

ஆனால் ஒரு சில நாயகிகளுக்கு மட்டும் ஒரே நேரத்தில் 'அஜித்' மற்றும் 'விஜயுடன்' சேர்த்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி பட்ட அதிர்ஷ்டசாலி நடிகைகள் இவர்கள் இரண்டு பேர் தான்.

கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான 'புலி' படத்தில் நடித்துக்கொண்டே அஜித் நடித்த 'வேதாளம்' படத்திலும் நடித்தவர் ஸ்ருதிஹாசன். இதனால் ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

இதே போல தற்போது அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார், அதே போல  அட்லீ இயக்கி வரும் 'விஜய் 61 ' படத்திலும் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இதன் மூலம் ஒரே நேரத்தில் விஜய் மற்றும் அஜித்துடன் இணைந்து நடிக்கும் அதிர்ஷ்டம் இரண்டாவது முறையாக காஜல் அகர்வாலுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.