samatha decision will be change for nagasaithanya
நடிகை சமந்தா, தான் இரண்டு வருடமாகக் காதலித்து வந்த நடிகர் நாகசைதன்யாவை அண்மையில் கரம் பிடித்தார். இவர்களது திருமணம் கோவாவில் இரு வீட்டார் முறைப்படியும் மிகவும் பிரமாண்டமாக நடந்தது.
திருமணத்திற்கு முன் சமந்தா கொடுத்த பேட்டி ஒன்றில், என்னுடைய காதலன் என் நண்பன் மாதிரி, எனக்கு சமைக்கத் தெரியாவிட்டாலும், சைதன்யாவிற்கு நன்றாக சமைக்க தெரியும் ஆகவே நான் சமைக்கத் தெரியாது என கவலையும் படமாட்டேன், இனி சமைக்கவும் கற்றுக்கொள்ள மாட்டேன் என கூறினார்.

ஆனால் திருமணம் ஆனதும் இவருக்கு திடீர் என தன்னுடைய கணவருக்கு சமைத்துப் போட வேண்டும் என்கிற ஆசை வந்து விட்டதாம். இதனால் தற்போது தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு, சமையல் கற்றுக்கொள்ளும் முழு முயற்சியில் அதிரடியாக இறங்கியுள்ளாராம்.
