samantha workout video : சமந்தா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் செம ஹார்ட் வொர்க் செய்யும் சமந்தாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

நடிகை சமந்தா (Samantha), தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுதவிர அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கில் உச்சகட்ட கவர்ச்சியில் அவர் ஆடிய நடனம் திரையுலகினரை மட்டுமல்லாது ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.உயர்ந்து கொண்டே செல்கிறது. திருமண வாழ்க்கையில் சமந்தா இந்த ஆண்டு தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலிக்கிறார். 

விவகாரத்திற்கு பின் துவண்டு விடுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது தான் புது பொலிவுடன் சமந்தா மிளிர்ந்து வருகிறார். அவர் அவ்வப்போது இன்ஸ்டாவில் பதியும் புகைப்படங்களும், வீடியோக்களும் செம வைரலாகி வருகிறது. என்ன நடந்தாலும் தன் நலத்தில் எப்போது கவனமாக இருக்கும் சமந்தா தினமும் ஒர்கவுட் செய்வதை நிறுத்துவதில்லை . அந்தவகையில் அவர் தற்போது செம ஹார்ட் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் எவ்ளோ எனர்ஜி என வாழ்த்து கூறி வருகின்றனர்.

View post on Instagram