தெலுங்கு திரையுலகில் எவர் க்ரீன் நடிகராக இருப்பவர் நாகார்ஜூனா. இவருடைய இரண்டு மகன்களும், ஒரு பக்கம் ஹீரோவாக நடித்து கொண்டிருந்தாலும், இவரும் கதாநாயகனான தெலுங்கு சினிமாவில் பட்டையை கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் இவருடைய பிறந்த நாள், கடந்த 29 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, நாகர்ஜுனா தன்னுடைய மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மருமகளுடன், ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My 🍳 @chayakkineni 🤴🏽 .... PC @shilpareddy.official 💓

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on Aug 31, 2019 at 12:57am PDT

 

மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, மாமனாருக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக தன்னுடைய மாமனார் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, " உங்களைப் பார்த்து தான் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என கற்றுக்கொண்டேன், உங்கள் அழகான மனம், வாழ்க்கைக்கு நீங்கள் கொண்டு வரும் படைப்பாற்றல் மற்றும் நீங்கள் விரும்பும் மக்களின் வாழ்க்கை, ஆகியவற்றால் உங்களின் வயதை தோற்கடித்து விட்டீர்கள் மாமா. இந்த தலைமுறைக்குப் பின் வரும் தலைமுறையை நீங்கள் தொடர்ந்து ஊக்குவிப்பீர்கள்.." என்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் சமந்தா.

 

நாகர்ஜூனாவின் பிறந்த நாளுக்கு, திரையுலகை சேர்ந்த பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.;