ஒரு படத்தில் நடித்தோமா ஃபுல் செட்டில்மெண்ட்டை வாங்கினோமா அத்தோடு அதை மறந்தோமா என்று இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தான் நடிக்கும் படத்தின் வெற்றிக்காக திருப்பதிக்கு பாத யாத்திரை சென்று சிறப்பு வழிபாடு ஒன்றையும் நடத்தியிருக்கிறார் நடிகை சமந்தா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’படத்தில் இவரது கேரக்டர் பலராலும் சிலாகிக்கப்பட்டது. தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் நடிப்பில் ‘ஓ பேபி’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படம் வரும் ஜூலை 5ம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய தோழியும் பிரபல விஜே மற்றும் நடிகை ரம்யாவுடன் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதற்கு முன் சீமராஜா படம் வெளியாகும் முன்பு இதே போல் சாமி தரிசனம் செய்தார் எனினும் சமந்தாவின் வேண்டுதலையும் மீறி சீமராஜா சூப்பர் ஃப்ளாப் ஆனது.