குஷி படத்தில் சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் லிப்லாக் காட்சிகள் நிறைந்த ‘ஆராத்யா’ வீடியோ சாங் இதோ

சமந்தா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த குஷி படத்தில் இடம்பெற்ற ஆராத்யா என்கிற ரொமாண்டிக் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Samantha vijay deverakonda Starrer Kushi movie Aradhya Video Song released gan

தெலுங்கில் சமந்தா - விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்த திரைப்படம் குஷி. ஷிவா நிர்வாணா இயக்கிய இப்படம், கடந்த செப்டம்பர் 1-ந் தேதி தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்டது. ரொமாண்டிக் காமெடி திரைப்படமான இது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக் குவித்தது.

குஷி படத்திற்கு முன்னதாக விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதேபோல் நடிகை சமந்தாவுக்கும் சாகுந்தலம் அட்டர் பிளாப் ஆகி இருந்தது. இதனால் குஷி படம் அவர்கள் இருவருக்குமே தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளது. குஷி திரைப்படம் உலகளவில் ரூ.90 கோடிக்கு மேல் வசூலித்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... எஸ்.ஏ.சி-க்கு ஆபரேஷன்... அப்பாவை பார்க்க அமெரிக்காவில் இருந்து அவசர அவசரமாக வந்த தளபதி விஜய் - வைரலாகும் Photo

குறிப்பாக தமிழகத்தில் மட்டும் ரூ.10 கோடிக்கு மேல் குஷி திரைப்படம் வசூலித்துள்ளது. குஷி திரைப்படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் பாடல்களும் முக்கிய காரணமாக அமைந்தன. ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரிலீசுக்கு முன்பே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருந்தன. அப்பாடல்கள் படத்திலும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில், குஷி படத்தில் இருந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஆராத்யா பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சமந்தா - விஜய் தேவரகொண்டா இடையே லிப்லாக் காட்சிகள் நிரம்பி வழியும் இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் இப்பாடலை வெளியிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஜவான் பாடலுக்கு ஜாலியாக டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்... இதுலயும் அட்லீ கேமியோவா! வைரலாகும் ரீல்ஸ் வீடியோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios