தெலுங்கு தமிழ் ஆகிய இரண்டு மொழி திரைப்படங்களிலும் திருமணத்திற்கு பின்பும் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை சமந்தா. இவர் திருமணத்திற்கு பின் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து, மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'சீமராஜா', விஜய் சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ்' ,விஷாலுக்கு ஜோடியாக 'இரும்புத்திரை' ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். விரைவில் இந்தப் படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடந்து இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்க வாய்புகள் வந்தாலும், வரும் வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாரம் சமந்தா. காரணம் இவர் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இப்போதே தேடி வரும் பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்.