மீடூ மூலம் கவிஞர் வைரமுத்து மீது தைரியமாக பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தவர் பிரபல பாடகி சின்மயி.  இவரைத் தொடர்ந்து பலர் தங்களுக்கு அலுவலகங்களிலும், சினிமா துறையிலும் நடந்த பாலியல் குற்றங்களை சமூக வலைதளம் மூலம் கூறினர்.

இதனால் சின்மயி பல படங்களில் பாடும் வாய்ப்பை இழந்துவிட்டதாக கூட கூறியிருந்தார்.  இந்நிலையில் தற்போது சமந்தா நடித்துள்ள ஓபேபி படத்தில், சமந்தாவுக்கு டப்பிங் பேசியுள்ளார் சின்மயி.

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய சமந்தா,  சின்மயி தன்னுடைய குரலால் என்னுடைய நடிப்பை மேலும் அழகு படுத்தி உள்ளார்.  சின்மயியின் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவர் மற்ற பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். அவரை நினைத்து பெருமைப்படுவதாக சமந்தா கூறியுள்ளார்.

மேலும் மனதில் பட்டதை பேசும் அவருக்கு மற்ற பெண்களும் ஆதரவளிக்க வேண்டும் என சமந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.