samantha shocking statement her ex lover
சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்து, இன்று தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. அதிலும் திருமணம் ஆகி விட்டால் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நிலைக்க முடியாது என்று காலம் காலாமாக இருந்த பழக்கத்தையும் அடியோடு மாற்றி தற்போது வரை பல முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பின் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சமந்தா, சமீபத்திய ஒரு பேட்டியில் சமந்தா தனது முன்னாள் காதலன் குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
அதில் அவர், நடிகையர் திலகம் படத்தில் நடிக்கும்போது நான் என் சொந்த வாழ்க்கை கதையில் நடிப்பதை போன்று உணர்ந்தேன். நான் ஒரு நடிகரை கண்மூடித்தனமாக காதலித்தேன், ஆனால் நல்ல நேரம் எனக்கு அந்த நடிகரிடம் இருந்து தப்பித்துவிட்டேன்.
இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையும் சாவித்திரி வாழ்க்கை மாதிரியே ஆகியிருக்கும். நான் செய்த புண்ணியம் தான் நான் நாக சைத்தன்யாவை சந்தித்தது என்று கூறியுள்ளார்.
