Samantha Pushpa song: புஷ்பா படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா" பாடல் யூடியூபில் 20 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
அல்லு அர்ஜுன் (Allu Arjun) மற்றும் ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி, வைரலாகி, தமிழ்நாட்டில் கூட படத்தின் நல்ல ஓப்பனிங்குக்குக் காரணமாகியுள்ள புஷ்பா திரைப்படத்தின் ''ஊ சொல்றியா மாமா" பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

'ஊ சொல்றியா மாமா' பாடல்:
இந்த பாடல் அனைத்து மொழிகளிலும், குறிப்பாக தமிழில் மிகவும் பிரபலம் அடைந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள 'புஷ்பா' படத்தின் தமிழ் வெர்ஷனில் விவேகாவால் எழுதப்பட்டு, ஆண்ட்ரியாவின் வசீகரமான குரலில், வெளிவந்து கேட்பவரை சற்று கிறங்க வைத்தது இந்தப் பாடல். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவ, இந்தபாடலுக்கு இளசுகள் ரீலிஸ் செய்து இணையத்தில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வந்தனர்.
சமந்தா மற்றும் அல்லு அர்ஜுன் நடனம்:

இந்த பாடலுக்கு மற்றுமொரு, ப்ளஸ்ஸாக சமந்தா மற்றும் அல்லு அர்ஜுனில் நடனத்தில் இளசுகளை சூடேற்றியது.
அந்த பாடலில் இடம்பெரும், சேல ப்ளவுஸ்சோ சின்ன கவுனோ, டிரெஸ்சுல ஒன்னும் இல்லைங்க, ஆச வந்தா சுத்தி சுத்தி அலையா அலையும் ஆம்பள புத்தி' போன்ற வரிகள் ஆண்களை மிகவும் தரம் தாழ்த்தும் விதமாக இவ்வரிகள் அமைந்திருப்பதாக சினம் கொண்டு சர்சையை கிளப்பியது ஒரு தரப்பு.
ஊரே 'புஷ்பா' ஃபீவர்:
இருப்பினும், இன்றளவும், இதன் மவுசு குறையாமல், ஊரே 'புஷ்பா' ஃபீவர் பிடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

20 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை:
இப்படத்திலுள்ள 'ஊ சொல்றியா மாமா, சாமி சாமி, ஸ்ரீவல்லி' போன்ற பாடல்கள் இணையத்தில் ஹிட் அடித்தன. இந்த பாடல்களுக்கு சிறுவர் தொடக்கி, பெரியவர்கள் வரை என அனைவரும் நடனமாடி புஷ்பா'ஃபீவர் பிடித்து திரிந்தனர்.
இந்நிலையில், புஷ்பா படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா" பாடல் யூடியூபில் 20 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
மேலும் படிக்க..."அந்தக் குழந்தையே புஷ்பா தான் சார்..!" இணையத்தை கலக்கும் குட்டி புஷ்பா வீடியோ..!!
