சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த ஒரு மாதமாகவே அதிக கவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது இது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் புத்தி இருக்கா? என சமந்தா கோவத்தை கக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த ஒரு மாதமாகவே அதிக கவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது இது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் புத்தி இருக்கா? என சமந்தா கோவத்தை கக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாலும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்து மற்றும் கிருஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் கோவாவில் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இதற்க்கு இவருடைய குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதே போல் ஏதேனும் குடும்ப விஷேஷம் என்றால், எவ்வளவு பிசியாக நடித்து வந்தாலும் அதனை ஓரம் கட்டிவிட்டு குடும்ப விசேஷங்களில் பொறுப்பான மனைவியாகவும், மருமகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதனால் இவரை பார்த்து பலர் பொறாமையும் பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தீயாக பரவி வரும், விவாகரத்து குறித்து சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே வாய் திறக்கவில்லை. இவர்கள் இருவரும் குடும்ப னால நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூட தெலுங்கு மீடியாக்கள் கிசுகிசுத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, இன்று நடிகை சமந்தா திருப்பதி கோவிலுக்கு வருகை தந்தார். அவரிடம் பிரபல செய்தி தொலைக்காட்சி இது குறித்து கேள்வி எழுப்பிய போது, 'கோவிலில் இருக்கிறேன்... புத்தி இல்லையா? என மிகவும் கோவமான வார்களிகளை உதிர்த்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்".

பொது இடத்தில் சமந்தா இப்படி நடந்து கொண்டதற்கு, பலர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…