samantha not participate in nagarjuna 25th year marriage cermoney

குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளாமல், நடிகை சமந்தா படப்பிடிப்பில் கலந்துக்கொண்டதால், சமந்தா அவரின் மாமனார், மாமியாரை தலைகுனிய வைத்து விட்டார் என கூறப்படுகிறது.

நடிகை சமந்தாவின் மாமனாரும், பிரபல நடிகருமான நாகார்ஜுனாவும், அவருடைய மனைவி அமலாவும் தங்களுடைய 25வது ஆண்டு திருமண நாள் விழாவை கொண்டாடினர்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இவர்களின் 25வது ஆண்டு திருமண விழா கொண்டாட்டத்தில், இவர்களின் நெருங்கிய குடும்ப நண்பர்கள் பலர் கலந்துக்கொண்டு இவர்களை வாழ்த்தினர். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் நாகர்ஜூனாவின் மகன்கள், நாகசைதன்யா மற்றும் அகிலும் கலந்துக்கொண்டனர். ஆனால் மூத்த மருமகளான சமந்தா மட்டும் கலந்துக்கொள்ள வில்லை. இதனால் இந்த விழாவில் கலந்துக்கொண்ட பலர் சமந்தா எங்கே? என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் பெற்றோரின் திருமண நாள் அன்று எடுத்த புகைப்படத்தை நடிகர் அகில் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவர்கள், சமந்தா எங்கே காணவில்லை என அகிலிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு சற்று நேரம் பதில் கொடுக்காமல் மெளனமாக இருந்துள்ளார். பின் தான் இவருடைய மௌனதிற்கான விடை தெரிந்தது. சமந்தா படப்பிடிப்பில் பிசியாக உள்ளாராம். அதனால் அவரால் மாமனார், மாமியாரின் 25 வது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லையாம்.

Scroll to load tweet…

தொழில் பக்தி காரணமாக தன்னுடைய வீட்டில் கொண்டாடப்படும் முக்கிய விழாவான இதில் கூட கலந்துக் கொள்ளாமல், நடிகை சமந்தா தன்னுடைய மாமனார், மாமியாரை தலைகுனிய வைத்து விட்டார் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.