samantha movie team complaint cyber crime

நடிகை சமந்தாவிற்கு திருமணம் ஆனாலும் தமிழில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும், தெலுங்கில் ராம் சரணுக்கு ஜோடியாகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளாரோ... அதே அளவுக்கு இவரைப் பற்றி எழும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை. சமீபத்தில் கூட திருமணத்திற்கு பிறகு, தன்னுடைய முதலிரவு அறையை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இதற்காக சமூக வலைத்தளத்தில் இவருக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது அவர் தெலுங்கில் ராம் சரண் தேஜாவுடன் நடித்து வரும் ரங்கஸ்தலம் படத்தின் புகைப்படம் வெளியாகியது. சமந்தாவின் கதாபாத்திரத்தைப் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் ரகசியமாக வைத்து வந்த படக் குழுவிற்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இதனை வெளியிட்டவர் யார் என தேடுவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர் படக்குழுவினர். இதனால் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.