தமிழில், இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான 'மைதிலி என்னை காதலி' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா.  ஐரிஷ் தாய்க்கும், பெங்காலி தந்தைக்கும், மகளாக பிறந்த இவர் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

எதேர்ச்சியாக சினிமா வாய்ப்பு தேடி செல்ல, இவரை பார்த்ததுமே இந்த படத்திற்கு "நீ தான் ஹீரோயின்" என இன்ப அதிர்ச்சி கொடுத்தார் டி.ராஜேந்தர். இந்த படத்தை தொடர்ந்து, அமலாவின் அழகிற்கு வரிசை கட்டி நின்றது பல படங்கள்.

அந்த வகையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் காதல் வலையில் சிக்க இவர், அவரையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு, நிகில் என்கிற மகனும் உள்ளார்.

மேலும் நாகர்ஜூனாவின் முதல் மனைவி மகன், நாகசைதன்யா மீதும் அமலாவுக்கு கொள்ளை பாசம். எந்த ஒரு விஷேஷம் என்றாலும், நாக சைதன்யா மற்றும் மருமகள் சமந்தாவிற்கு முதல் அழைப்பு சென்று விடும். 

இந்நிலையில், பிட்னெஸ் மீது அதிக அக்கறை கொண்ட மருமகள் சமந்தாவுக்கே சவால் விடும் அளவிற்க்கு நடிகை அமலா ஜிம் ஒர்க்அவுட்டில் கலக்கிய வீடியோ பார்பவர்களையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 

அந்த வீடியோ இதோ...

View post on Instagram