திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமே நடித்து அசத்தி வரும், பிரபல நடிகை சமந்தா 5 நிமிட காட்சி ஒன்றில் நடிக்க 35 லட்சம் சம்பளமாக வாங்க உள்ளதாக கூறப்படுவது, மற்ற நடிகைகளை அதிர்ச்சியாக்கி உள்ளது.

திருமணம் ஆகிவிட்டால், திரையுலகை விட்டே காணாமல் போய் விடும் நடிகைகள் மத்தியில், தன்னுடைய குடும்பத்தின் ஆதரவோடு தொடர்ந்து தன்னுடைய நடிப்பு திறமையை மெருகேற்றும் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் சமந்தா.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம், தமிழ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பாராட்டை அள்ளியது.

இந்நிலையில் தற்போது இவர், தன்னுடைய மாமனார் நாகார்ஜூனாவின் மன்மதுடு-2வில் நடிக்க உள்ளார். இந்த படத்தில்  வெறும் 5 நிமிட காட்சியில் தான் சமந்தா நடிக்கிறாராம்.

ஆனால் இவருக்கு சம்பளமாக 35 லட்சம் கொடுக்க உள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இது வளர்ந்த நடிகைகள் பலரை அதிர்ச்சியாக்கியுள்ளது.