திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் சமந்தாவை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். ஆனால் சமந்தா, தற்போது எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகம் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா-நாக சைதன்யா ஜோடி. பிஸியாக படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களுக்குள் உள்ள நெருக்கத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய குடும்பத்தினருடன் குரோஷியாவிலுள்ள டர்போனிக் நகரில் தங்களுடைய முதல் திருமண வருடத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

சமந்தா, நாகசைதன்யா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட ஃபோட்டோ ஒன்றினை ஷேர் செய்து “என் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறந்தவைகளில் ஒன்று, நான் ஒவ்வொருநாளும் உன்னிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடுகிறேன்.  முதல் திருமண நாள் வாழ்த்துகள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் நாக சைதன்யா” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

ஏப்போதும் கணவருடன் தனியாகவே வெளிநாடுகளுக்கு செல்லும் சமந்தா, இந்த முறை தன்னுடைய திருமண கொண்டாட்டத்திற்கு மாமியார் அமலா, மாமனார் நாகார்ஜுனா, மற்றும் மைத்துனர் அகிலுடன் சென்றுள்ளார்.

ஆனால் கவர்ச்சிக்கு மட்டும் தடை போடாமல், குடும்பத்தோடு தன்னுடைய திருமண கொண்டாட்டத்தை கொண்டாடியுள்ளார் சமந்தா.

மேலும் ரசிகர்களுக்கு தன்னுடைய திருமண நாள் பரிசாக, குரோஷியாவில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும், கணவருடன் படு கவர்ச்சியாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் சிலர் சமந்தாவிற்கு தொடர்ந்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.

அதே போல், சிலர் சமந்தாவிற்கு குடும்பத்தோடு வெளியில் செல்லும் போது இப்படி மிகவும் ஆபாசமான உடைகள் அணிய வேண்டாம், என ஆரோக்கியமாக அட்வைஸ் செய்து வருகிறார்கள். 

சமந்தா வெளியிட்ட புகைப்படங்கள் இதோ: