திருமணத்தை தொடர்ந்து, சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் பாக்கியம் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது.  அந்த வகையில், நடிகை சமந்தாவை மிகவும் அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம்.

தற்போதும் இவரை பல இயக்குனர்கள் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இவர் திருமணத்தை தொடர்ந்து நடித்த படங்களும் ஹிட்டானதால் சற்றும் மார்க்கெட் குறையாமல், தன்னை முன்னணி நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் சமந்தா.

மேலும் பிட்னெஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், அடிக்கடி ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் மற்றும் விதவிதமான ஆடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.

இந்நிலையில் இவர் கருப்பு நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த உடையின் இரண்டு பக்கங்களும் மிகவும் ட்ரான்ஸ்பெரெண்டாக அவருடைய உடல் தெரிகிறது. எனவே சமந்தா இந்த புகைப்படத்தை 'ஆடை' பட நடிகை அமலாபாலுக்கு போட்டியாக வெளியிட்டுள்ளாரா என ராசிகள் சிலர் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.