samantha commited rakul raveendharan movie
மாஸ்கோவின் காவிரி
2007 ம் ஆண்டு ரவி வர்மனின் மாஸ்கோவின் காவிரி என்ற படத்தில் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் சமந்தா. இந்த திரைப்படம் சரியாக போகவில்லையென்றாலும் சமந்தா பெரிய அளவில் பேசப்பட்டார்.
திருமணம்
அதன் பிறகு தெலுங்கில் நடிக்க தொடங்கிய இவர் அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்து தற்போது நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை கல்யாணம் செய்து அங்கேயே செட்டிலாகி விட்டார்.
நடித்து வரும் படங்கள்
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து விஷாலுடன் இரும்புத்திரை சிவகார்த்திகேயனுடன் சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
சின்மயி
இந்நிலையில் தன்னுடைய முதல் படமான மாஸ்கோவின் காவிரி படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ராகுல் ரவீந்திரனுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் ரவீந்திரன் பிரபல பின்னணி பாடகி சின்மயியின் கணவராவார். இவர் நிறைய தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
பவன்குமார்
யாஞ்சி பாடல் புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான கன்னட படம் யு டர்ன்.பவன் குமார் இயக்கிய இப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரீமேக் ஆகிறது. பவன்குமாரே இரண்டு மொழிகளிலும் இயக்குகிறார்.
