நடிகை சமந்தாவின் காதலரான பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா, 'நரகாசுரன்' என்கிற திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த 'துருவங்கள் 16' படதின் இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கவிருக்கும் 'நரகாசுரன்' திரைப்படத்தில் அரவிந்த்சாமியுடன் இணைத்து நாகசைதன்யா நடிக்க உள்ளார்.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இயக்குனர் கார்த்திக் நரேன் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கடந்தா 2010ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நாகசைதன்யா நடித்தார் என்பது குறிப்பிடதக்கது. 

திகில் கலந்த படமாக உருவாகவுள்ள 'நரகாசுரன்' திரைப்படத்தை தமிழில் மட்டும் எடுக்கிறார்களா அல்லது தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாக்குகிறார்களா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.