Samantha change the name after marriage

நடிகை சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்து, பல போராட்டங்களைக் கடந்து சினிமாத்துறையில் நுழைந்து முன்னணி நடிகையாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர்.

இவர் முதலில் நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்தார். இவர்கள் காதல் திருமணப் பேச்சு வரை சென்று திடீர் என ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நின்று போனது. இதன் பின்னர், சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார் சமந்தா.

பின் தன்னுடைய 9 வருட நண்பரான நாகசைதன்யாவை காதலிக்கத் தொடங்கினார் சமந்தா. ஆரம்பத்தில் இவர்களுடைய காதலுக்கு நாகசைதன்யா வீட்டில் எதிர்ப்புகள் இருந்தாலும், சமந்தாவின் குணம் நாகார்ஜூனாவிற்கு பிடித்துப் போனதால் இவர்களுடைய காதலுக்கு பச்சைக் கொடி இரு வீட்டிலும் காட்டப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய காதலனைக் கரம் பிடித்த சமந்தா தற்போது, நாகசைதன்யா குடும்பத்திற்காக தன்னுடைய பெயரை சமந்தா அக்கினேனி என்று மாற்றிக்கொண்டாராம். இதனை சற்றும் எதிர்பார்க்காத நாகார்ஜூனா குடும்பத்தினர் சமந்தாவின் செயலைப் பார்த்து மகிழ்ச்சியில் உள்ளனராம்.

ஏற்கனவே சமந்தா திருமணத்திற்கு முன்பு ஏழுமலையான் கோவிலுக்கு மூன்று முறை சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.