‘குஷி'யில் சமந்தாவை விரட்டி விரட்டி காதலிக்கும் விஜய் தேவரகொண்டா - வைரலாகும் ‘என் ரோஜா நீதான்’ பாடல்
சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி உள்ள குஷி திரைப்படத்தில் இடம்பெறும் என் ரோஜா நீதான் என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சமந்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் குஷி. இப்படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முஸ்லீம் பெண்ணாக நடிகை சமந்தா நடிக்கிறார்.
குஷி படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் முதல் பாடல், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டு உள்ளது. என் ரோஜா நீதான் எனத் தொடங்கும் ரொமாண்டிக் பாடலான இதற்கு மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுதி உள்ளார். இப்பாடலை இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் தான் பாடி உள்ளார். இதன் லிரிக்கல் வீடியோ 5 மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... ஏன்டா இது ஒரிஜினல் போஸ்டர்னு சொல்ல மாட்டீங்களா... ‘லால் சலாம்’ ரஜினியை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
இந்த லிரிக்கல் வீடியோவில் நடிகை சமந்தாவை விஜய் தேவரகொண்டா துரத்தி துரத்தி காதலிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்தப் பாடல் முழுவதும் காஷ்மீரில் தான் படமாக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாடல் முழுவதும் நடிகை சமந்தா புர்கா அணிந்தபடி காட்சியளிக்கிறார். இந்த லிரிக்கல் வீடியோவின் இறுதியில் இப்பாடலின் மேக்கிங் வீடியோவும் இடம்பெற்று உள்ளது.
இதையும் படியுங்கள்... போட்ட பிளான் எல்லாம் வேஸ்டா போச்சே.. திருட்டுத்தனமாக இணையத்தில் லீக் ஆன ஆதிபுருஷ் டிரெய்லர் - ஷாக்கான படக்குழு