தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. பக்கா சென்னை பொண்ணான சமந்தா, "மாஸ்கோவின் காவிரி" என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் வைத்தார். பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி, தெறி உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு திரையில் தோன்றாமல் இருந்த சமந்தா, "சூப்பர் டீலக்ஸ்" படம் மூலம் அதிரடி கம்பேக் கொடுத்தார்.புகழ்பெற்ற "த பேமிலி மேன் 2" வெப் சீரியலில் வில்லியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ள சமந்தா, அதில் தீவிரவாதியாக களம் இறங்க உள்ளார். 

 திருமணத்திற்கு பிறகும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்டன் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். குறிப்பாக கணவர் நாக சைதன்யாவுடன் ஊர் சுற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி கேள்வி கேட்ட ரசிகருக்கு, வீடியோ மூலம் அதிரடி பதிலளித்தார் சமந்தா. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டாகி உள்ளது. 

தற்போது மஞ்சள் நிற உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் துளி கூட கவர்ச்சி இல்லாமல் சமந்தா கொடுத்துள்ள மாஸ் போஸ்கள் ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளது.  தகதகக்கும் தங்க மாம்பழம் போல மின்னும் சமந்தாவின் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெற லெவலில் வைரலாகி வருகிறது.