முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை சமந்தா, திருமணம் ஆகி ஒரு வருடத்தை கடந்த பிறகும் தொடர்ந்து... தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

கடந்த வருடம் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'சீமராஜா' படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து, பலராலும் எதிர்பார்க்க கூடிய படங்களில் ஒன்றான இவர் நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் அண்மையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட சமந்தாவிடம், குழந்தை எப்போது பெற்று கொள்வீர்கள் என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன் வைத்தனர்.

இதற்கு பதில் கொடுத்த சமந்தா, "நான் குழந்தைக்கு தாய் ஆகிவிட்டால் கண்டிப்பாக திரையுலகில் இருந்து முழுமையாக விலகி விடுவேன். நான் குழந்தையாக இருந்த போது, பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். ஆனால் என் குழந்தை விஷயத்தில் அப்படி எதுவும் ஆகிவிட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன்.

குழந்தை பெற்று கொள்வது குறித்து நானும் என் கணவர் நாகசைதன்யாவும் திட்டமிட்டுளோம். ஆனால் அது இப்போது அல்ல. இது குறித்து வேறு ஏதாவது கேள்விகளை கேட்பதாக இருந்தால் தன்னுடைய கணவரிடம் கேட்டு கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இதில் இருந்து இப்போதைக்கு சமந்தா திரைப்படங்கள் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார் என தெரிகிறது.