தமிழ், தெலுங்கு என இரு மொழி ரசிகர்களையும் நடிப்பாலும், அழகாலும் கவர்ந்தவர் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில்... இவரின் துணிச்சலான கதாப்பாத்திரத்திற்கும், நடிப்பிற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. மேலும் தேசிய அளவிலான ஊடகங்களிலும் சமந்தாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

சமீப காலமாக உடல் பயிற்சி மீது அதீத ஆர்வம் கொண்டுள்ள சமந்தா, தற்போது 6 பேக் உடல் காட்டுக்கு ஆயத்தமாவதை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், 6 பேக் வைப்பதற்கான முயற்சி எடுப்பதும், உடல் கட்டுகளும் தெரிகிறது. ஏற்கனவே நடிகை ரெஜினா, 6 பேக் வைத்து அசத்தினார். அவரை தொடர்ந்து சமந்தாவின் இந்த முயற்சி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.