கடந்த 9பது ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த சமந்தாவும் - நாகசைதன்யாவும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது

.

இதில் சமந்தா - நாகசைதன்யாவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.


நிச்சயதார்த்தத்தில் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர்.


இந்த நிச்சயதார்த்தம் இந்துக்கள் முறைப்படி, புரோகிதர் வைத்து மந்திரங்கள் ஓதி நலங்கு வைத்து சிறப்பாக நடைபெற்றது.

இவர்களுடைய திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தற்போது சமந்தா யு டர்ன் படத்தின் தயாரிப்பாளராகவும், விஜய், விஷால், சிவகார்த்திகேயன், பகத் பசில் ஆகியோருடன் நாயகியாக நடிக்க கமிட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.