Salman Khan said about South India fans

“தென் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் விசுவாசமனாவர்கள்” என்று இந்தி நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.

பாகுபலி 2 வெற்றியைத் தொடர்ந்து சல்மான் – பிரபாஸ் இணைந்து சரித்திரப் படத்தில் நடிக்க இருக்கின்றனர்.

இந்த நிலையில் பாகுபலி வெற்றிப் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள சல்மான் தென் இந்திய சினிமா ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினார்.

“தென் இந்தியாவில் சினிமா ரசிகர்கள் விசுவாசமானவர்கள். ஒரு கமல் ரசிகர் எப்போதும் கமல் ரசிகராகவே இருப்பார். ரஜினி ரசிகர் வாழ்நாள் முழுக்க ரஜினி ரசிகர்தான். அந்த அளவிற்கு விடாப்பிடியான ரசிகர்கள் தென் இந்தியாவில் இருக்கிறார்கள். இங்கு நிலைமை அப்படி இல்லை” என்று சல்மான் கூறியுள்ளார்.