Salman khan introduces cycle for his brand
பாலிவுட்டில் பிரபல நடிகர் சல்மான் கான், எப்போதும் தனது அடையாளம் என்று கூறி சில வார்த்தைகளை குறிப்பிட்டு வருவார்.
‘Being Human' அதாவது ‘மனிதனாக இரு’ என்பதை அடையாளப்படுத்தும் வார்த்தைகள். அதனை தனது பிராண்ட் ஆக வைத்துள்ளார்.
இந்த நிலையில் புதிதாக தனது பிராண்ட் சைக்கிள்களை, நடிகர் சல்மான் கான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இந்தியாவில் சைக்கிள் பயன்பாடு குறைந்து வரும் நிலையில், அதனை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் பெரிதும் துணைபுரிய வல்லது.
இந்திய நகரங்களில் படிப்படியாக சைக்கிள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய சைக்கிள்கள் BH27 மற்றும் BH12 என்ற மாடல்களில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு, கருப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றன.
மணிக்கு 25 முதல் 30 கி.மீ தூரம் பயணிக்கும். மிதிவண்டியாகவும், பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரிக் சைக்கிளாகவும் சாலைகளில் ஓட்டிச் செல்லலாம்.
சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதன் விலை ரூ.40 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
