உலக நாடுகளையே பயமுறுத்தி வரும், கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாளுக்கு நாள், இந்தியாவிலும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்த கொடூர வைரஸில் பிடியில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் முழு வீச்சில், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், மக்கள் சிலர் ஊரடங்கு நேரத்தில், வெளியில் வந்ததால் கொரோனா பாதிப்பு எகிறி வருகிறது.

சுமார் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கூலி வேலை செய்யும் பலர் வேலை இன்றி சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில், நகர பகுதியில் வசிக்கும் சிலருக்கு தன்னலர்கள் முன் வந்து செய்யும் உதவி கிடைத்தாலும், கிராம பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எந்த ஒரு போக்கு வரத்து வசதியும் இல்லாததால், உதவிகள் சென்றடையவில்லை. 

இது குறித்து, பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார், சல்மான் கானுக்கு தெரியவர... உடனடியாக கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு உதவ முடிவு செய்தார். அதன் படி அணைத்து பொருள்களையும் வாங்கி, தன்னுடைய திரையுலக நண்பர்கள் மூலம், மாட்டு வண்டியில் ஏற்றி, பசி பட்டினியோடு வாடி வரும் கிராமத்து மக்களுக்கு மளிகை மற்றும் உணவு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இதனை வீடியோவாக எடுத்து சல்மான் தான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து, சினிமாவில் மட்டும் என ரியல் லைஃபிலும் சூப்பர் ஸ்டார் என நிரூபித்துவிட்டார்.