Sikandar Zohra Jabeen Song Teaser Released : சிக்கந்தர் படத்தில் இடம் பெற்ற ஜோரா ஜபீன் பாடலின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

Sikandar Zohra Jabeen Song Teaser Released : 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று சல்மான் கானின் சிகந்தர். இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் (Sikandar) படத்தில் சல்மான் கான் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால், சத்யராஜ், பிரதீப் பப்பர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சல்மான் கான் இந்தப் படத்தில் சஞ்சய் ராஜ்கோட் மற்றும் சிக்கந்தர் என்று இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

https://www.instagram.com/reel/DGu_fLCCZg3/?utm_source=ig_web_copy_link

2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று சல்மான் கானின் சிகந்தர். இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் (Sikandar) படத்தில் சல்மான் கான் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால், சத்யராஜ், பிரதீப் பப்பர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சல்மான் கான் இந்தப் படத்தில் சஞ்சய் ராஜ்கோட் மற்றும் சிக்கந்தர் என்று இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

https://www.instagram.com/reel/DGkpSkyvJlG/?utm_source=ig_web_copy_link

கடந்த மாதம், சல்மான் தனது அதிரடி திரைப்படத்திற்கான டீசரை வெளியிட்டார். ஒரு நிமிடம் 21 வினாடிகள் ஓடும் இந்த டீசர், சஞ்சய் என்ற சல்மானின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது. அவரை அவரது பாட்டி சிகந்தர் என்று அழைக்கிறார். இந்த டீசரில் சல்மான் அதிரடி காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் பஞ்ச் வசனங்களும் உள்ளன.

"சட்டப்படி இருந்தா லாபமா இருக்கலாம்" மற்றும் "நான் நீதி கேட்க வரல, கணக்கு கேட்க வந்திருக்கேன்" போன்ற வசனங்களை சல்மான் தனது ஸ்டைலில் பேசியுள்ளார். கஜினி மற்றும் துப்பாக்கி போன்ற தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சஜித் நடியாட்வாலா இந்த படத்தை தயாரித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளியான கிக் திரைப்படத்திற்குப் பிறகு சல்மான் கான் அவருடன் மீண்டும் இணைந்துள்ளார்.

சிகந்தர் திரைப்படத்தின் புதிய போஸ்டரையும் சல்மான் வெளியிட்டார். அதில் அவர் ஒரு கூர்மையான ஆயுதத்திலிருந்து தப்பிக்கிறார். சிக்கந்தர் படத்திற்கு பிறகு சல்மான் கிக் 2 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.