sakthi open talk he is mother

பிரபல இயக்குனர் வாசுவின் மகன் சக்தி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி நடித்த படங்கள் அவருக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. தற்போது வரை தமிழ் சினிமாவில் தன்னை ஒரு நடிகனாய் நிலைநிறுத்திக்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் இவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன் பிரபல தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவர் ஆரம்பத்தில் இருந்தே, தன்னுடைய தோழியான காயத்ரி ரகுராமுடன் சேர்ந்து கொண்டு சுய புத்தியுடன் செயல் படாமல் காயத்ரி பேச்சைக் கேட்டு வீணாய்ப் போனது தான் மிச்சம். ஒரு வேளை அவர் இந்த நிகழ்ச்சியில் யாருடைய பேச்சையும் கேட்காமல் சுய புத்தியோடு செயல் பட்டிருந்தால் பிக் பாஸ் டைட்டிலை வென்று கூட இருக்கலாம். இவருக்கு ட்ரிகர் சக்தி என்கிற பெயரும் வந்து சேர்ந்திருக்காது என்பதுதான் உண்மை.

ஆனால் இவர் ஓவியா பற்றித் தெரிந்து கொள்ளாமல் அவர் ட்ரிகர் செய்து விடுகிறார் என குறை கூறிக்கொண்டிருந்தது இவர் மீது பலருக்கும் வெறுப்பை வர வைத்தது. தற்போது ஒரு பேட்டியில் இது குறித்து பேசியுள்ள சக்தி, நான் என்னுடைய சுய புத்தியோடு நடந்து கொள்ளாமல் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு மோசமாக நடந்துகொண்டேன் என காயத்ரியை தாக்கி பேசுவதுபோல் கூறியுள்ளார்.

மேலும் நான் பல நல்ல விஷயங்கள் செய்திருந்தாலும் அவை எதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவில்லை. நான் செய்த கெட்ட விஷயங்கள் தான் வெளிவந்திருக்கிறது என நினைக்கிறேன். இதில் நான் நடந்து கொண்டதைப் பார்த்து, என் அம்மா மனம் வருந்தி கதறி அழுதார், அப்போது பெற்ற தாயைக் கதறி அழ வைத்த கொடூரனாகத் தான் என்னை நான் பார்த்தேன் என மிகவும் மன வருத்தத்தோடு கூறியுள்ளார் சக்தி.