sakthi and arthi fight for ajith song

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 12 வது நாளில் போட்டியாளர்கள் மூன்று குழுவாக பிரிந்து, நடனம், இசை, நாடகம் ஆகிய பிரிவுகளில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். அப்போது அஜித்தின் "வீரம்" படத்தில் அஜித் அசத்தலாக நடனமாடிய "ஜிங் ஜிக்கா ஜிங்" என்கிற பாடலுக்கு சக்தி, காயத்திரி, ஓவியா, ஆரவ், ஆகியோர் மிகவும் அருமையாக நடனமாடி பரிசு கோப்பையை பெற்றனர்.

அதற்கு ஆர்த்தி இது தல பாடல் அதனால தான் உங்களுக்கு கிடைத்தது, நீங்கள் நடனமாடியதால் கிடைக்க வில்லை என கூற... சிறு பிரச்சனையாகி பின் ஆர்த்தி வாயை மூடி கொண்டு போய் விட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ரைசாவிடம் ஆர்த்தி ஏதோ சக்தியை பற்றி சொல்ல மீண்டும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் வந்தது. அப்போது சக்தி நான் அஜித் ரசிகன், ரசிகனால் மட்டும் தான் அவரை உள்வாங்கிக்கொண்டு நடனமாட முடியும் என கூறினார்.

அதற்கு ஆர்த்தி, நீங்கள் நடனமாடிய பாடல் ஸ்டைல் எல்லாம் அஜித்துடையது தானே அப்போ அஜித்தால் தானே உங்களுக்கு பரிசு கிடைத்தது என கூற, கோபமான சக்தி நீங்கள் அஜித் போல் ஆடுறீங்க என்பது தவறில்லை, நாங்கள் ஆடாமல் அஜித் பாட்டுக்காக மட்டும் இந்த பரிசு கொடுத்ததாக நீங்கள் சொல்லுவது தான் தவறு என செம டோஸ் விட்டார் .

உடனே ஆர்த்தி கீழே விழுந்துட்டோம் ஆன ஏன் முகத்துல மண்ணு ஒட்டுல என்பது போல் நான் கேட்பேன் நான் அவருடைய தங்கச்சி என்று கூறிக்கொண்டு பாவமாக அந்த இடத்தை விட்டு சென்றார்.