பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவை வைத்து பார்த்தால், கவின் - லாஸ்லியா பேசுவதை வைத்து சண்டை போடுகிறார் சாக்ஷி. இதனால் பெரிய பிரச்சனை பிக்பாஸ் வீட்டில் வெடிக்கிறது.

மேலும் இத்தனை நாள் பிக்பாஸ் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் இருந்து வந்த லாஸ்லியா, இப்போது புதிதாக ஒரு பிரச்சனையில் சிக்கி உள்ளார். ஆனால் இவருக்கு எதிராக யாரும் பேசவில்லை என்றாலும், சாக்ஷிக்கு அட்வைஸ் கொடுக்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டின் சவுண்டு சரோஜா வனிதா கனத்த குரலில், சாக்ஷியிடம் இதையெல்லாம் பெரிய பிரச்சனையாக பேசி, உன்னுடைய எதிர்காலத்தை வீணடிக்கிறாய் என கூறுகிறார். இதை தொடர்ந்து திடீர் என எழுந்து, நான் கொஞ்சம் பேச வேண்டும் என லாஸ்லியா கூற அதனை யாரும் காது கொடுத்து கூட கேட்கவில்லை.

உடனே லாஸ்லியாவை பின் தொடர்ந்து வரும், கவின் என்ன பிரச்சனை என கேட்க, இனி என்னிடம் நீ பேச வேண்டாம் என அதிரடியாக கூறுகிறார்.